கொலுசுகளின் சிணுங்கல்கள்...

நீ கோபமாய்
முறைக்கும் போதும்
என்னை
முறையாய்
அழைக்கிறது
உன் கொலுசுகள்...
--------------------------------------------------------------------------------------------

நீ வேகமாய்
நடக்கும் போதும்
என்னை மெதுவாய்
அழைக்கிறது
கொலுசுகள்...
--------------------------------------------------------------------------------------------

வளை தொட்ட போது
சிணுங்கியது
அவள் மட்டுமல்ல
அவள் வெள்ளி
கொலுசும்தான்...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template