ஒளிஞ்சிட்டு இருக்கேன்...

ரு ஊருல உள்ள கோவில்ல, கல்லெடுத்து சாமிமேல எறிந்து, சாமிய கும்பிடுவது தான் வழக்கம். வெளியூரில் இருந்து கும்பிட வந்த ஒருவரிடம் பூசாரி கல்லை கொடுத்து விஷயத்தை சொன்னார். அவரும் சாமியை கும்பிடுட்டு கல்லை தூக்கி சாமிமேல எறிந்தா சாமி குத்தம் ஆகுமென்று, அதை தூக்கி பக்கத்தில உள்ள மரத்துல எறிந்தார். உடனே அவரது ரெண்டு கண்ணும் போய்டுச்சி. அவர் அழுது கொண்டே சாமியிடம் "நான் உன்ன நல்லாதான கும்பிட்டேன், என்ன ஏன் தண்டித்தாய்" என்று கேட்டார். அதற்க்கு சாமி "நானே இந்த ஊரு மக்கள் என்மேல கல்லத் தூக்கி எரியுறாங்கனு மரத்துல போய் ஒளிஞ்சிட்டு இருக்கேன். நீ அதை பார்த்துட்டு என் மேல கல்ல தூக்கி எறிஞ்சிடா" என்றாராம்.
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template