பெட்ரோல் போடும் போது ஏமாறாமல் இருப்பது எப்படி?

ரம்பத்தில் ஜீரோ பார்ப்பது மட்டும் போதாது; பெட்ரோல் போடும் வரை கவனத்தை சிதறவிடாமல் இருப்பது நல்லது.

பெட்ரோல் போட்டு முடித்த பிறகே பணம் அல்லது கார்டை கொடுக்கவும்.

கார்டுகொடுப்பதாக இருந்தால் உங்கள் கண்பார்வை படுகிற இடத்திலேயே கார்டை ஸ்வைப் செய்யும்படி சொல்லுங்கள்.


காருக்கு பெட்ரோல் அல்லது டீசல் போடும் போது காருக்குள் உட்காந்திருக்க வேண்டாம். வெளியே வந்து சரியாக பெட்ரோல் போடுகிறார்களா என்று பாருங்கள். கண்ணாடியை துடிக்கிறேன் என்று சிலர் உங்கள் கவனத்தை திருப்பினாலும் மீட்டர் மீது ஒரு கண் வையுங்கள்.

100, 500 என்று ரவுண்டான தொகைக்கு பெட்ரோல் போடாமல் ஐந்து லிட்டர், பத்து லிட்டர் என்கிற கணக்கில் பெட்ரோல் போடுங்கள். இதனால் முழுமையான திகை உடனே வராது. அது போன்ற சமயங்களில் ஏமாறும் வாய்ப்பும் குறைவு.

ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் என குறைந்த அளவில் பெட்ரோல் போட்டால் ஏமாறும் வாய்ப்பு குறைவு. ஆனால் இது சிறிய இரு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ஒரே பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதில் தவறில்லை. அப்போதும் அதிகக் கூட்டம் இல்லாத நேரம் பார்த்துப் போடலாம். எனினும் கவனம் தேவை !!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template