A.T.M ல் - ல் தான் எவ்வளவு பிரச்சனைகள்..!!

பணம் கையில் வராமல் கணக்கில் வந்தால்...

பொதுவாக பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் பிரச்னை, " பணத்தை எடுக்க போனேன். பணம் வரவில்லை ஆனால் என் கணக்கில் அந்த தொகை குறைந்திருக்கிறது" என்பது தான்.
இதுபோன்ற பிரச்சனைக்கு விரைவாக உங்கள் கணக்கிருக்கும் வங்கிக்கு சென்று புகார் தெரிவித்தால் உடனடியாக உங்கள் பணம் கணக்கில் வரவு வைக்க படும். இதுவே மற்ற வங்கி A.T.M மாக இருந்தால் உங்கள் பணம் வந்து சேர பத்து முதல் பதினைந்து நாட்கள் ஆகிறது. ஆனால் புகார் தெரிவித்த 12 நாட்களுக்குள் நமது பணத்தை கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்றும், அப்படி இல்லையெனில் வாடிக்கையாளருக்கு தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்குக்ம் வங்கி 100 ரூபாய் அபராதமாக வழங்கவேண்டும் என்றும் R.B.I. உத்தரவிட்டுள்ளது. இது 2009 ஆகஸ்ட் முதல் அமலில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இந்த உத்தரவு பற்றி தெரியவில்லை. மேலும் புகார் தெரிவித்து 30 காத்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் உங்கள் பகுதி வங்கி குறைதீர்ப்பு ஆணையத்திடம் முறையிடலாம்.

 
பின் நம்பர் மறந்துவிட்டால்...

A.T.M. கார்டின் பின் நம்பரை சிலர் மறந்துவிடுவார்கள். அப்படி மறந்துவிட்டால் இந்த நம்பராக இருக்குமோ என்று திரும்ப திரும்ப கார்டை போட்டுப் பார்க்காதீர்கள்.அப்படி செய்தால் கார்டு ப்ளாக் ஆகி விடும்.
பின் நம்பர் மறந்துவிட்டால் வங்கிக்கு சென்று அந்த கார்டைக் கொடுத்தால் அந்த கார்டின் செயல்பாட்டை துண்டித்துவிட்டு அந்த கார்டை இரண்டு துண்டாகவும் உடைத்துவிட்டு, புது கார்டு கொடுப்பார்கள். பின் நம்பரை பொறுத்தவரை உங்களுடைய அல்லது உங்கள் உறவினர்களின் பிறந்த தேதி, திருமண தேதி போன்றவற்றை ரகசிய எண்ணாக வைக்காதீர்கள். அதேபோல் டைரியிலோ, செல்போனிலோ பின் நம்பரை குறித்து வைக்கும் வழக்கமும் வேண்டாம். மற்றவர்கள் உங்கள் பின் நம்பரை யூகிக்கவோ தெரிந்து கொள்ளவோ வாய்ப்பளிக்காதீர்கள்!

கார்டு மாட்டிக்கொண்டால்...

பழைய சிஷ்டத்தைப் பின்பற்றும் A.T.M. - களில் கார்டை உள்ளே இழுக்கும் முறைதான் இருக்கிறது. சில சமயம் உள்ளே போன கார்டு வெளியே வராமல் போய்விடுவதும் உண்டு!
A.T.M. - ல் கார்டு மாட்டிக்கொண்டால் உடனே கஸ்டமர் கேர் நம்பருக்கு புகார் தெரிவிக்கவும் என்று A.T.M. மையத்திலே அறிவித்திருப்பார்கள். அந்த எண்ணில் தொடர்பு கொண்டோ புகார் தெரிவிக்கவும். ஒருவேளை அந்த எண்ணில் தொடர்பு கொள்ள முடியாத பட்சத்தில் உங்கள் வங்கி கிளைக்கு சென்று எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவித்து, உங்கள் அவசரத்தின் நிலையை வங்கியின் மேலாளரிடம் விளக்கினால் 24 மணி நேரத்தில் புதிய கார்டு கிடைக்க வாய்ப்புள்ளது. இதுவே நீங்கள் வேறு ஊரில், வேறு வங்கி A.T.M. - மை பயன்படுத்தி கார்டு உள்ளே போட்டிருந்தால் உங்கள் கணக்கிருக்கும் வங்கிக்கு தெரிவித்தால் முதற்க்கட்டமாக ப்ளாக் செய்துவிடுவார்கள்.

தேய்ந்து போன மேக்னட்டிக் ஸ்டிரிப்...

A.T.M. கார்டின் பின்பக்கம் இருக்கும் மேக்னட்டிக் ஸ்டிரிப் (கருப்பு நிறத்தில் இருக்கும் பட்டை) அடிக்கடி பயன்படுத்துவதன் புலமும், உராய்வின் காரணமாகவும் செயலிழக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
தேந்துபோன ஷ்டிரிபால் கார்டின் பரிவர்த்தனையை A.T.M. ஏற்றுக் கொள்ளாது. இரண்டு, மூன்று A.T.M.களுக்கு சென்றபோதும் அக்கவுண்டில் பணம் எடுக்க முடியவில்லை என்றாலோ, மற்றவர்களின் கார்டு வேலை செய்யும்போது உங்கள் கார்டு மூலம் கார்டு மட்டும் பணம் எடுக்க முடியவில்லை என்றாலோ சுதாரித்து கொள்ளவும். உங்கள் வங்கிக்கு சென்று புகார் தெரிவித்தால் புதிய கார்டை வழங்குவார்கள்.

அவரவர் வங்கி A.T.M. - மே சிறந்தது...

பெருந்தொகை எடுப்பதாக இருந்தால் கூடுமான வரை அவரவர் வங்கி A.T.M. கலைப் பயன்படுத்துவதே நல்லது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கு பணம் எடுத்து பிரச்னை ஆனாலும் கணக்கிருக்கும் வங்கியின் A.T.M. எனில் உடனடியாக பிரச்னை சரி செய்யப்பட்டு பணம் உடனே கணக்கில் வந்துவிடும். மற்ற வங்கி A.T.M. எனில் பணம் வந்து சேர வாரகனக்காகும்.

வேண்டவே வேண்டாம் செல்போன்...

A.T.M. பயன்படுத்தும் போது செல்போனில் பேசுவதை தவிர்க்கவும். அப்படி பேசும்போது உங்களது கவனம் சிதறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் இருக்கிறது. அதனால் நீங்கள் எடுக்க நினைத்த பணத்தை விட அதிகமாகவோ, குறைவாகவோ குறிப்பிட வாய்ப்பு இருக்கிறது. உள்ளே கார்டை எடுக்காமல் போகவும், பணத்தை எடுக்காமல் போகவும் வாய்ப்புகள் உண்டு.

இங்கே குறிப்பிட்டுள்ளது போக அடிப்படை பாதுகாப்பு விசயங்களை கடைபிடிப்பதன் மூலமும் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template