வாழ்க்கைக்கு 11...

1> நானே பெரியவர், நானே சிறந்தவர் என்கிற அகந்தையை விடுங்கள்...
2> எந்த விசயத்தையும், பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள் , விட்டுகொடுங்கள்...
3> நீங்கள் சொல்வதே சரி, செய்வதே சரி, என்று வாதிடாதீர்கள்...
4> மற்றவர்களை விட உங்களையே உயர்த்தி நினைத்து கர்வபடாதீர்கள்...
5> அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைபடாதீர்கள்...
6> கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் நம்பி விடாதீர்கள்...
7> அற்ப விசயங்களை பெரிதுபடுத்தாதீர்கள்...
8> உங்களின் கருத்துகளில் உடும்பு பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்தி கொள்ளுங்கள்...
9> புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்...
10> அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்...
11> பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்கள் பேச்சை துவங்க முன் வாருங்கள்....

இப்படியெல்லாம் ஒருவர் நடந்து கொள்வாரேயானால் அவருக்கு துன்பங்கள் தூசி போல தான்...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template