நண்பேண்டா...!!

கேள்வி குறியிட்டு
கேட்டு வைப்பதற்கு - நட்பொன்றும்
கேள்வியும் அல்ல...
ஆச்சிரிய குறியிட்டு
அதிசயப்படுத்துவதற்கு - நட்பொன்றும்
இலக்கியமும் அல்ல...
முற்று புள்ளி வைத்து
முடித்து வைப்பதற்கு - நட்பொன்றும்
மொழியும் அல்ல...
இல்லாததைச் சொல்லி
விளங்க வைப்பதற்கு - நட்பொன்றும்
இலக்கணமும் அல்ல...
மொத்தத்தில்
இலக்கணத்திலும் இலக்கியத்திலும்
அடங்க - நட்பொன்றும்
காவியமும் அல்ல...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template